எக்ஸ்பிரஸ் பேர்ள் சி.சி.டிவி காட்சிகள் திட்டமிட்டு அழிப்பு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்போது கப்பல் தரித்திருந்த இடத்திலிருந்து துறைமுகத்துக்குள் வரும் வரையிலான சி.சி.டிவி காட்சிகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுள்ளன. நீதவான் விசாரணைகளில் இது வெளிப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (30) அமர்வில் கலந்துகொண்டு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் சபையில் உரையாற்றிய கிரியெல்ல எம்.பி, இந்த சி.சி.டிவி காட்சிகள் அழிக்கப்பட்டதால் இக் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் நட்டஈட்டை பெறுவதில் பிரச்சினை எழுந்துள்ளது. இதனை அரசாங்கமே அழித்தது எனவும் கூறினார்.

image 1f06028c80

#SriLankaNews

Exit mobile version