இலங்கையின் பொருளாதாரத்தின் பின்னணியில் சர்வதேச சக்தியொன்று செயற்படுவதாகவும், இந்த சக்தி இன்னும் செயற்படுவதாகவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதத்தின் போதே முன்னாள் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
இந்த சக்திகளின் உள்ளூர் முகவர்கள் இன்னும் செயலில் உள்ளனர்.தேசத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு நிதியுதவி செய்தவர்கள் அவர்கள்தான். அவர்களின் நடவடிக்கை சுற்றுலாத் துறையை பாதிக்கிறது, இது இப்போது மீண்டு வரத் தொடங்கியுள்ளது.
பாதுகாப்பு ஒதுக்கீடு தொடர்பில் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு நாட்டின் பாதுகாப்பு எல்லாவற்றையும் விட முக்கியமானது என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். தேசத்தின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
வரவு -செலவுத் திட்டம் 2023 சில துறைகளின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை என்றாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான மாபெரும் பாய்ச்சலாகும். வரவு -செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. நஷ்டத்தில் உள்ள அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
இருப்பினும் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தேசிய சொத்துக்களை வெளிநாட்டு சக்திகளுக்கு விற்பதற்கு நாங்கள் எதிரானவர்கள்” என்றும் கூறினார்.
#SriLankaNews