நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு

cur

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை(23) முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்வோர் மற்றும் பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்வோர் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version