சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
தெற்காசியா மற்றும் கிழக்காசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும் உலகளாவிய பெறுமதி வலையமைப்புடன் இலங்கையை ஒருங்கிணைத்து அதனை கிழக்கு பிராந்தியத்திற்கும் விரிவுபடுத்துவதன் மூலம் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டு முயற்சியில் (RCEP) இணைந்து கொள்வதே ஜனாதிபதியின் விருப்பமாகும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.
இந்த அபிவிருத்திச் செயற்பாட்டின் இறுதிப் பயனாளிகளாக தனியார் துறை கைத்தொழில்கள் இருப்பதால் இதற்கு ஆக்கப்பூர்வமாக பங்களிக்குமாறு தனியார் துறைக்கு ஜனாதிபதியின் செயலாளர் அழைப்பு விடுத்தார்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வர்த்தக சபை மற்றும் கைத்தொழில் ஆலோசனைக் குழுக்களுக்கு அறிவிக்கும் கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நிதியமைச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews