மாற்று உடையில் ஆசிரியைகள்!!

image 1e9619ba1a

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலை ஆசிரியைகள் சிலர், இன்றையதினம் பாடசாலைக்கு சாரியை அணிந்துவராமல், கவுன், நீள காற்சட்டை, குர்தா ஆகிய அடைகளை அணிந்து வந்திருந்தனர்.

நாட்டின் தற்போதைய ​பொருளாதார நெருக்கடி நிலைமையினால்,சாரிகளின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக, சாரிக்கு பதிலாக ஏனைய ஆடைகளை அணியவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என ஆசிரியைகள் சிலர், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக, சாரியை அணிவதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. ஆகையால், அரச ஊழியர்கள் பொருத்தமான ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளிக்கலாம் என பொதுநிர்வாக அமைச்சு சுற்றறிக்கையை விடுத்துள்ளது.

ஏனைய அரச ஊழியர்களைப் போல, சாரி அல்லாமல், பொருத்தமான ஆடைகளில் அணிந்துவந்து கடமையாற்றுவதற்கு ஆசிரியைகளுக்கு அனுமதியளிக்குமாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், கல்வியமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அந்த கோரிக்கையை கல்வியமைச்சு நிராகரித்து இருந்தது. இந்த நிலை​யிலேயே, ஆசிரியைகள் சிலர், ஏனைய ஆடைகளை அணிந்துகொண்டு பாடசாலைகளுக்கு சென்றுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version