மதிய உணவின் தரம் தொடர்பில் ஆராய்வு!

image 69087a66b9

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து பிராந்திய மற்றும் பிரதேச அலுவலகங்கள் பரிசோதித்து வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, ​மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் 7,000க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் நடைமுறையில் உள்ளது என சுகாதாரம் மற்றும் போஷாக்கு பிரிவுக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் மஹிந்த எஸ். யாப்பா கூறினார்.

இதேவேளை, ஊட்டச்சத்து குறைபாடுகளின் தற்போதைய நிலை சிறு குழந்தைகளின் பல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதித்துள்ளது என்று லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட பல் வைத்தியர் திருமதி சோனாலி ரணதுங்க தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version