இலங்கை
கிளைபோசேட் மீதான தடை நீக்கம்!
கிளைபோசேட் மீது அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கையொப்பத்துடன் கூடிய வர்த்தமானி அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார்.
விவசாய பிரதிநிதிகள், விவசாய நிபுணர்கள், வேளாண் வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடை அடுத்து கிளைபோசேட் தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் 2015 ஆம் ஆண்டு முதன்முதலில் கிளைபோசேட் தடைசெய்யப்பட்ட போதிலும் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கான மாற்று நடவடிக்கைகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
#SriLankaNews
You must be logged in to post a comment Login