ஐ.நா குழுவினர் – யாழ். மேயர் சந்திப்பு

image cb19c3145d

ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும் யாழ். மாநகர மேயர் வி. மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

யாழ். மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் உடனிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்கள ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் பீற்றர் டியு, அரசியல் விவகார அதிகாரி அல்மா சாலியு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினரே யாழ்ப்பாண மாநகர சபைக்கு விஜயம் செய்தனர்.

சந்திப்பின் நிறைவில் ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வருகைதந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர் பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version