முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை திரும்பவுள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்
அண்மைய அரசியல் நெருக்கடியின்போது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு பயணமானார்.
தற்போது அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ, நாளைமறுதினம் காலை 8 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்.
#SriLankaNews