எகிறியது பாடசாலை உபகரணங்கள் விலை!!

istockphoto 546761524 612x612 1

பாடசாலை மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், காலணிகள் மற்றும் சீருடைகளின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக, அந்த பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் புறக்கோட்டை பிரதேசத்தில் “அருண” நாளிதழ் நடத்திய ஆய்வின் போது இது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு பாடசாலை புதிய தவணைக்கு தேவையான உபகரணங்களை 5,000 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள கூடியதாக இருந்த போதும், இந்த வருடம் குறித்த தொகை 15,000 ரூபாவை தாண்டுவதாக தெரியவந்துள்ளது.

80 பக்கங்கள் கொண்ட அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை முன்பு 55 ரூபாவாக காணப்பட்ட நிலையில் தற்போது 145 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 180க்கு விற்பனை செய்யப்பட்ட சித்திரப் புத்தகத்தின் விலை 270 ரூபாயாக அதிகரித்துள்ளது. 80 பக்க சிஆர் புத்தகத்தின் விலை 160 ரூபாவில் இருந்து 320 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

10 ரூபாய் விலையில் இருந்த அழிப்பான் 40 ரூபாயாகவும், வரைவதற்கு பயன்படுத்தப்படும் பேஸ்டல் பெட்டியின் விலை 70 ரூபாவில் இருந்து 195 ரூபாவாக அதிகரித்துள்ளது.

10 ரூபாவாக இருந்த பேனாவின் விலை 30 ரூபாவாகவும், ஏ4 கடதாசி 10 ரூபாவில் இருந்து 10 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

அதன்படி, புத்தகங்களின் விலை, பக்க எண்ணிக்கையை பொறுத்து, 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

இவ்வாறாக ஒவ்வொரு பாடசாலை உபகரணங்களின் விலையும் உயர்ந்துள்ளதுடன், 1500 ரூபாவாக இருந்த ஒரு ஜோடி காலணி தற்போது 3000 ரூபாவை தாண்டியுள்ளது.

இதேவேளை, பாடசாலை பை ஒன்றின் விலையும் 1,000 ரூபாவில் இருந்து 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version