யாழில் பேரணி

image 8a843650a4

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்திய சாலை முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (14) காலை 7.30 மணியளவில் ஆரம்பித்த பேரணி யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி ஊடாக வேம்படிச் சந்தியை அடைந்து, பிரதான வீதியை ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

பேரணியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சர்வதேச நீரிழிவு தினம் நவம்பர் 14 ஆம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், மக்களிடையே நீரிழிவு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையால் குறித்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version