இலங்கை

அகதிகளை பார்வையிட்டார் வியட்நாமின் பொலிஸ் கேணல்!

Published

on

கப்பலில் இருந்து மீட்கப்பட்டு வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கை அகதிகளை வியட்நாமின் பொலிஸ் கேணல் அதிகாரி டிரான் வான் பார்வையிட்டதுடன் வியட்நாம் அரசு மற்றும் செயல்பாட்டு முகமைகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யும் என தெரிவித்துள்ளார்.

இங்கு தங்குவதற்கு வசதியாக இருப்பதாக இலங்கையர்கள் கூறுகின்றனர், குறிப்பாக காலை சுவையான உணவு குழந்தைகள் சிறுவர்களுக்கு பால் மற்றும் தேவையான பொருட்களை வழங்குவதுடன் தன்னார்வலர்கள் குழு வருகைதந்துள்ளது.

அதிகாரிகளும் செயல்பாட்டுத் துறைகளும் அவர்களுக்காக தங்கியை பகுதியை சுத்தம் செய்ய ஆட்களை அனுப்பியுள்ளனர். குளிக்க, மலசலகூட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன

இது இவ்வாறு இருக்க இலங்கையர் ஒருவர் சிகரெட்டும் வாங்கும் படமொன்றை வியட்நாம் TouTre newspaper வெளியிட்டுள்ளது

இவர்களுக்கான உதவிகளை வியட்நாமில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் ஒழுக்கமைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த இலங்கையர்களுக்கு வியட்நாம் மருத்துவக் குழுவினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 7 பேர் Xuyen Moc மாவட்ட மருத்துவ மையத்தில் பரிசோதனை இடம்பெற்றது என மாவட்ட மக்கள் குழுவின் தலைவர் – Le Thi Trang Dai தெரிவித்துள்ளார். சத்தான உணவுகளையும் அவர்களுக்கான சுகாதார கருவிகளை வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version