தமிழர் பிரச்சினை! – பேச்சுக்கு அழைப்பு

ranil wickremesinghe 759fff

தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கும், சர்வதேசத்தின் தலையீடுகள் இன்றி சுமுகமாக தீர்வு காண்பதற்கும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக, இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், பசுமை தொடர்பான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, ஏற்கனவே கைதிகள் தொடர்பில் ,அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது சிறையில் உள்ள எழுத்தாளார் தொடர்பில் வழக்கு இடம்பெற்று வருகின்றது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவரின் விடுதலை அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காணாமல் போனோர் விடயங்களையும் ஆராய்கின்றோம். அடுத்த வாரம் இது பற்றி தமிழ் தரப்புடன் கலந்துரையாடவுள்ளோம். அதற்கு தமிழர் தரப்பு பங்களிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version