யாழில் சட்டவிரோதமாக காணிகள் விற்பனை! – அவதானத்துடன் செயற்பட கோரிக்கை

image 4cdac5c500

யாழ்ப்பாணம் வசாவிளான், ஒட்டகப்புலம் பகுதிகளில் கள்ள உறுதி முடித்து காணிகள் விற்கப்படுவதாகவும், அதனால் அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில், கடந்த 32 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த சில காணிகள் தற்போது விடுக்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர்கள் அவற்றினை அடையாளம் கண்டு அறிக்கைப்படுத்த முன்னர், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு உரிமையாளரின் பெயர்களை மாற்றம் செய்தும் , உறுதிகளில் மோசடி செய்தும், கள்ள உறுதிகள் முடித்து, அக்காணிகளை விற்பனை செய்யும் முயற்சிகளில் சில குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

எனவே, அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் உறுதி விடயத்தில் அவதனாமாகவும் விழிப்பாகவும் இருக்குமாறும், வாங்கப் போகும் காணிகள் தொடர்பில் தீர விசாரிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version