சீரற்ற காலநிலை! – 37 பேர் பாதிப்பு

IMG 20221101 WA0064

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 12 குடும்பங்கள் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 5 பேர் வசித்து வந்த வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக குறித்த 12 குடும்பங்களாக சேர்ந்த 37 பேர் தமது இருப்பிடங்களை விட்டு காக்கை தீவு மீனவ சங்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் சிறுவர்கள் பெண்கள் அடங்குவதுடன் இவர்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் தொடர்ந்து வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் தொடர்ச்சியான மழைக்காலங்களில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version