2023 மார்ச் மாதத்துக்கு பிறகு எந்நேரத்தில் வேண்டுமானாலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அவசர பொதுத்தேர்தலொன்று நடத்தப்படலாம் என தெரியவருகின்றது.
அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, சிங்கள வார இதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற திகதியில் இருந்து இரண்டரை வருடங்களுக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
உத்தேச 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திலும் அந்த ஏற்பாடு மாற்றப்படவில்லை.
எனவே, 2023 மார்ச் மாதத்துக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிட்டும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தியே ஜனாதிபதி, அவசர பொதுத்தேர்தலொன்றுக்கு செல்வாரென நம்பப்படுகின்றது.
எனினும், முன்கூட்டிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு மொட்டு கட்சி முன்வைத்த நிபந்தனைகளுள், நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படக்கூடாது என்பது பிரதானமானதாகும்.
ஆனால் சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கு முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. அரசியல் ஸ்தீரமற்ற தன்மையும் ஏற்பட்டள்ளது. இந்நிலையிலேயே அவசர தேர்தல் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
#srilankanews