” பஸில் ராஜபக்ச அமெரிக்காவில் தங்கியிருக்கமாட்டார். அவர் நிச்சயம் நாடு திரும்புவார். கட்சி பணிகளை முன்னெடுப்பார்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன், டலஸ் தரப்பு சம்பந்தமாக அடுத்த கட்சி சம்மேளனத்தில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறினார்.
#SriLankaNews