ஜெனிவா ஊடாக எம்மை முடக்க முடியாது!

Dinesh Gunawardena

” தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள்கூட விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இந்த ஆட்சிக்கு எதிரான சக்திகளே ஜெனிவாவில் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றன. ஜெனிவா ஊடாக எம்மை முடக்கும் முயற்சி கைகூடாது.”

இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்த ஆட்சியை கொண்டுசெல்ல முடியாது என கூறியவர்கள்தான், பொருளாதார விவகாரம் தொடர்பிலும் ஜெனிவாவில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள்கூட முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளின்கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். எமது அரசாங்கம் ஜனநாயக ஆட்சி முறைமை பின்பற்றுகின்றது. அந்தவகையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.

வரலாற்றில் என்றுமில்லாத நெருக்கடியை – சவாலை எதிர்கொண்டுள்ளோம். இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையை சர்வதேசம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சாதக பதில் கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உதவும். எனவே, ஜெனிவா ஊடாக எம்மை முடக்கலாம் என்ற முயற்சி கைகூடாது. ” – எனவும் பிரதமர் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version