Antonio Guterres
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்! – வாழ்த்துச் செய்தியில் ஐநா பொதுச் செயலாளர்

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம், இலங்கை எதிர்நோக்கியுள்ள தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.

இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய மூலோபாயத்தை வகுப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னை அர்ப்பணித்துள்ளார்.

இருப்பினும் இதற்கு. பொதுமக்களுடன் கலந்தாலோசித்தல், சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்தல் உட்பட அனைத்து தரப்பினருக்குமிடையில் கலந்துரையாடலை ஊக்குவிப்பது மிக அவசியம்.

இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது.

அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை தொடர்ந்து பேணுவதற்கு எதிர்பார்க்கின்றோம் – என்று தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...