அரசியல்

கால அவகாசம் வழங்கியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறவில்லை! – ஜனாதிபதி விளக்கம்

Published

on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது விரிவாக விளக்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற பாதுகாப்புப் படையினர் செயற்பட்ட விதம் குறித்து கவலையடைவதாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இச் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க கேபிடல் கட்டிடத்தை எதிர்ப்பாளர்களிடம் இருந்து விடுவிக்க அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் அமெரிக்க சட்டத்தின்படி இவ்வாறுதான் செயற்பட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

நாட்டின் பிரதான நிர்வாக கட்டிடம் ஜனாதிபதி செயலகம்.பல முக்கிய ஆவணங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

இச் சந்திப்பில், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் பிரதிநிதிகளுடன், இலங்கை சார்பில் சட்டமா அதிபர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரும் பங்கேற்றனர்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version