அரசியல்

தமிழ் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்படவில்லை!

Published

on

ஐனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பை பொறுத்தவரையில் ஒருமித்த கருத்து ஒருமைப்பாட்டுடன் செயற்படவில்லை. ஜனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பினர் மூன்று பிரிவுகளாக நின்று வாக்களித்தது என்பது பாதிக்கப்பட்ட இனத்திற்கு ஆரோக்கியமானதல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டே கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போராடத்தின் காரணமாக கொண்டுவரப்பட்ட புதிய அரசு என்பது நாட்டு மக்களுக்கும் சரி நாட்டினுடைய அபிவிருத்திக்கும் எவ்வளவு தூரம் பங்காற்றப்பட போகுது என்பதுதான் தற்போதுள்ள கேள்வி.

இந்த பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து ஜனாதியும், பிரதமரும், நிதி அமைச்சரும் விரட்டப்பட்டார்கள் என்பதனை விட இன்றும் ஆட்சி அதிகாரத்தில் பொதுஜன பெரமுனதான் இருக்கின்றது.

இன்று மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு பதிலாக தினேஸ் குணவர்தனவும் பிரதமராகவும்,கோட்டாபய ராஜபக்ஸ க்கு பதிலாக ரணில் விக்கிரமசிங்கவும் ஐனாதிபதி, பதவிக்கு வந்தார்களே தவிர கடந்த ஆட்சி காலத்தில் இருந்த அனைவரும் மீண்டும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே இந்த நிலையை பார்ப்போமாக இருந்தால் ஒருசில நபர்கள் மாற்றப்பட்டது விரட்டப்பட்டார்கள் என்பதை தவிர ஒரே கொள்கையை கொண்ட அரசாங்கத்தைதான் நாங்கள் இப்போது பார்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த மக்கள் திரண்டு எழுந்து நூறு நாட்களுக்கு மேலாக போராட்டம் செய்தது இந்த நிலைமைக்குதானா என்ற எண்ணமே எழுகின்றது.

இன்று அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு எதிராகவும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கின்றது. ஆகவே இவர்கள் நாட்டை நெறிப்படுத்துவார்கள் நாட்டை கடன் சுமையில் இருந்து மீட்டெடுப்பார்கள் என்று சொல்லி மக்கள் யாரும் நம்புவதாக இல்லை .

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகப் பெருமளவாக வாக்களித்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக கொண்டு வந்திருக்கின்றனர். அடுத்த இரண்டு வருட காலத்திற்கு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருப்பார். பெரமுன என்ற கட்சியின் ஆதரவு ரணிலுக்கு இருக்கும் வரை அவர் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றது.

ஆளும் கட்சி எதிர்க்கட்சி இணைந்து ஒரு சர்வ கட்சி அரசு உருவாகுமாக இருந்தால் உலக நாடுகள் நம்பிக்கை கொண்டு கடன்களை கொடுக்கவும் அல்லது இலங்கைக்கு உதவி செய்யவோ அது வழிவகுக்கம் என்ற சிந்தனை உலக நாடுகள் மத்தியில் இருந்தது ஆனால் சர்வ கட்சி அரசாங்கம் என்பது இப்பொழுது உருவாகவில்லை.

இந்த அரசாங்கத்திடம் இருந்து தமிழருக்குரிய முழுமையான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது . ஐனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பை பொறுத்தவரையில் ஒருமித்த கருத்து ஒருமைப்பாட்டுடன் நடைபெறவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பினர் மூன்று பிரிவுகளாக நின்று வாக்களித்தது என்பது பாதிக்கப்பட்ட தமிழ் இனத்திற்கான ஆரோக்கியமானதல்ல – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version