சர்வகட்சி அரசொன்று அமையும் பட்சத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா ஆகியோருக்கும் அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட ஏனைய சில கட்சிகளின் தலைவர்களுக்கும் அமைச்சு பதவிகளை ஒதுக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews