மொட்டிலிருந்து 15 பேர் வெளியே!

Sri Lanka Podujana Peramuna slpp 1

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற தயாராகியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் அவர்கள் சுயாதீனமாக செயற்படுவார்கள் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, டலஸ் அழகப்பெரும போட்டியிட்டார். எனினும், ரணில் விக்கிரமசிங்கவுக்கே மொட்டு கட்சி ஆதரவு வழங்கியது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே டலஸ் அணி தனிவழி செல்ல முடிவெடுத்துள்ளது.

#sriLankaNews

Exit mobile version