புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது வாக்கினை முதலில் பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாக்கினை பதிவிட்டார்.
அதனையடுத்து, ஏனைய உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் வாக்களித்தார்.
இன்று நடைபெறும் புதிய ஜனாதிபதி தெரிவுக்காக ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
#SriLankaNews