புதிய ஜனாதிபதியை தெரிவி செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்றத்தினால் இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய வாக்கெடுப்பில் உரிய விதிகளுக்கு அமைவாக ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அதனை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.
#SriLankaNews