இந்தியா
தமிழ் மக்களுக்கும் உதவுவதற்காக அனுமதிக்க வேண்டும் – காமெடி நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கை அமைச்சர் கடிதம்!

வடிவேலு உள்பட பல பிரபல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்த பிளாக் பாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமானார்.
இவர் நடிகராக மட்டுமின்றி இவர் உதவும் மனிதம் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பொருளாதார சிக்கலால் தத்தளித்து வரும் இலங்கைக்கும் அங்கு உள்ள தமிழ் மக்களுக்கும் உதவுவதற்காக அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடிதம் எழுதினார்
இந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக மக்களிடம் இருந்து பொருட்களை சேகரித்து எமது மக்களுக்கு அனுப்ப முன்வந்திருக்கும் உங்கள் பணியை சிறக்க எனது வாழ்த்துக்கள். உங்கள் செயலால் இலங்கை தமிழ் மக்களுக்கும், தமிழக மக்களுக்குமான தொப்புள் கொடி உறவுக்கும், தொன்மைக்குடி உணர்வுக்கும் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் மனிதாபிமான உதவி பொருட்கள் எமது கப்பல் சேவை மூலம் கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை செய்கிறேன்.
எனவே நம்பிக்கையுடன் உங்கள் பணியைத் தொடங்கலாம். ஈழத்தமிழ் மக்கள் சார்பாகவும் இலங்கை அரசு சார்பாகவும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என கடிதத்தில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login