இலங்கை

மன்னாரில் சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொலை!

Published

on

மன்னார், நொச்சிக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்தது என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் இருவரும் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் என்று தெரியவந்துள்ளது.

சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version