நுவரெலியாவில் கைக்குண்டு மீட்பு!

WhatsApp Image 2022 06 10 at 2.24.30 PM

நுவரெலியா பொலிஸாரால் நேற்று கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா ஆவேலியா பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வாவியில் (பெரேக் லேன் ஆவேலியா) இருந்து டி 82 ரக கிரேனைட் கைக்குண்டு ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா ஆவேலியா பகுதியில் வசிக்கின்ற தொழிலாளி ஒருவர், வழங்கிய தகவலின் பிரகாரம், குறித்த வாவிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போதே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றை நுவரெலியா நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பின்பு இந்த கைக்குண்டை அழிப்பதா அல்லது வேறு தரப்பினரிடம் கையளிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை வேட்டை தொடர்கின்றது.

#SriLankaNews

Exit mobile version