கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு என மக்களை அரசு பிரித்துப் பார்ப்பதில்லை என்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை ஒருபோதும் அரசு மேற்கொள்ளாது எனவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்க காலத்தை விட எமது அரச காலத்திலேயே வடக்கு கிழக்கில் அதிக அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கிழக்கில் வீடமைப்புத் திட்டங்களில் நிலவும் குறைபாடு தொடர்பில் இராசமாணிக்கம் சாணக்கியன் எம் பி எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், கிழக்கில் நிறைவு செய்யப்படாமல் உள்ள வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
#SriLankaNews