அரசியல்

சாணக்கியனின் கருத்துக்குப் பிரதமர் கடும் கண்டனம்!

Published

on

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே 20ஆம் திகதியன்று நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

20ஆவது அரசமைப்பு திருத்தம் உட்பட்ட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டன என்று சாணக்கியன் எம்.பி. வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இந்தக் கருத்தின் மூலம், சாணக்கியன், நடந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்கிறாரா? மரணத்தை ஏற்றுக்கொள்கின்றாரா? என்று ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.

சாணக்கியனின் கருத்தின்படி, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமையே வீடுகள் எரியூட்டப்பட்டமைக்குக் காரணமாக இருக்குமானால், குமார வெல்கமவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அந்தக் கருத்து பொருந்தாது என்று ரணில் குறிப்பிட்டார்.

கோட்டாபய வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று முதலில் கூறியவரே குமார வெல்கம என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் ரணில் குறிப்பிட்டார்.

எனவே, அவர் ஏன் தாக்கப்பட்டார் என்று ரணில் கேள்வி எழுப்பினார்.

எனவே, அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது சாணக்கியன் தமது கருத்து தொடர்பில் கவலை வெளியிட்டு தமது கருத்தைத் திரும்பப்பெறவேண்டும்.

இல்லையேல், குறித்த கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோர வேண்டியிருக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version