உள்ளக மற்றும் வௌியரங்குகளில் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் இலங்கையின் மருத்துவக் கல்லூரிகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின்படி, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் அன்டியன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment