மன்னார் மாவட்டத்தில், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் சுனாமி ஒத்திகை நிகழ்வு இடம்பெற்றது.
அச்சங்குளம், அருகங்குண்று போன்ற கடற்கரையோரப் பிரதேசங்களில் எதிர்காலத்தில் சுனாமி தொடர்பான அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது குறித்த அனர்த்தங்களில் இருந்து மக்களை விழிப்பூட்டுவதற்கும், அது சம்பந்தமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்குமான ஒத்திகை நிகழ்வு இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலகம், மன்னார் பிரதேச செயலகங்கள், இராணுவம், பொலிஸ், வேல்ட் விஷன், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, சென். ஜோன் அம்புலன்ஸ், செஞ்சிலுவைச் சங்கங்கள் உட்பட பல நிறுவனங்கள் இணைந்து ஒத்திகை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், நானாட்டான் பிரதேச செயலாளர் மா. ஸ்ரீஸ்கந்தகுமார் உட்பட வைத்தியர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
#SriLankaNews