நீதிமன்றில் சரணடைந்தார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

johnson fernando

காலிமுகத்திடல் தாக்குதல் சந்தேகநபரான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று மாலை சரணடைந்துள்ளார்.

இன்று இரவு 8 மணிக்கு முன்னதாக நீதிமன்றில் சரணடையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பகல் உத்தரவிட்டிருந்தது.

அத்துடன், குறித்த காலக்கெடு நிறைவடையும் வரையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவைச் செயற்படுத்த வேண்டாம் என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையிலேயே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் சரணடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version