அரசியல்

நாட்டில் கொலைக் கலாச்சாரமும் அதிகரிப்பு!!

Published

on

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கொலைக் கலாச்சாரமும் கோலோச்சியுள்ளது. கடந்த 5 நாட்களுக்குள் மாத்திரம் 7 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், வெட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டுபாய் உட்பட வெளிநாடுகளில் பதுங்கி வாழும் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கட்டத்தல் காரர்களில் உத்தரவுகளுக்கமையவே துப்பாக்கிச்சூட்டு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் பரந்தப்பட்ட விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி இந்த கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன எனவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தலுக்கு சாட்சியாக இருந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படடுள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக பெருந்தொகை போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். அவர்களுக்கு துப்பு – தகவல் வழங்கியவர்களே தற்போது கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என இலத்திரனியல் ஊடமொன்று செய்தி வெளியிட்டுளளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version