அரசியல்
சஜித்தின் கட்சியிலிருந்து 20 எம்.பிக்கள் ஐ.தே.கவுக்குத் தாவல்!
ஐக்கிய மக்கள் சக்தியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமிக்கவுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன எனவும், முக்கிய பதவிகள் சகிதம் அவர்கள் ஐ.தே.க. பக்கம் செல்வார்கள் எனவும் தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸ செயற்படுகின்றார். அக்கட்சியில் இருந்து ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் ஏற்கனவே ஐ.தே.கவுடன் இணைந்துள்ளனர்.
இந்நிலையிலேயே மேலும் 20 பேர் இணைவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
You must be logged in to post a comment Login