தியாகி சிவகுமாரனின் 48ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

ஈழ மக்களுக்காகத் தன்னையே தற்கொடையாகக் கொடுத்த வீரமறவன் தியாகி பொன். சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையால் உத்தியோகபூர்வமாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று காலை யாழ்., உரும்பிராயில் உள்ள தியாகி பொன். சிவகுமாரன் திருவுருவச் சிலை வளாகத்தில் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் பொது ஈகைச்சுடரை தியாகி பொன். சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார்.

தியாகி சிவகுமாரனின் சிலைக்கான மலர் மாலையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் நினைவு உரைகள் நிகழ்த்தப்பட்டன.

286230927 10217123833207176 1961168770044819301 n

#SriLankaNews

Exit mobile version