அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட வரைபுக்குத் தாமும் ஆதரவளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, 21ஆவது அரசமைப்பு திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த திருத்தம் உங்களுக்காகக் கொண்டுவரப்படுகின்றதா என முன்னாள் நிதி அமைச்சரிடம் ஊடகவியலாளர் தொடர்ந்தும் கேள்வி எழுப்பியபோது, பஸில் ராஜபக்ச சிரித்துக் கொண்டே, “காய்க்கின்ற மரத்துக்கே அதிகம் கல்லெறியப்படும் என்பது போல், வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் மற்றவர்களால் அதிக தடைகளைச் சந்திக்க நேரிடும்” – என்றார்.
#SriLankaNews
Leave a comment