வெவ்வேறு இடங்களில் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.
களுத்துறை – நாகொட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயாகல பகுதியைச் சேர்ந்த 35 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, அம்பாறை பிரதேசத்திலும் வீடொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment