கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி சிறுமி சாவு!

மின்சாரம் தாக்கி சிறுமி சாவு e1654167719574 1

வீட்டில் இருந்த பிளக்கில் கைபிடியற்ற ஸ்குரு டிரைவரைச் செலுத்திய 4 வயதுச் சிறுமி மின்தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

கிளிநொச்சி மாவட்டம், முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அன்ரன் ஜினேசன் ஜினேஜினி (வயது – 4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிறுமியின் உடல் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகள் நடைபெற்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version