இலங்கை மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பானது, வரவிருக்கும் உணவு நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச உதவியை நாடுவது குறித்து உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews