‘மே – 9’ வன்முறை: இதுவரை 1,500 பேர் கைது!

மே 9 வன்முறைச் சம்பவங்கள்

இலங்கையின் பல இடங்களில் கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இதுவரை 1,500 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

கைதானவர்களில் 677 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில், இதுவரையில் 844 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version