கைது
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் வாள்வெட்டுக் கும்பலில் ஐவர் வசமாக மாட்டினர்!

Share

வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருட்டு மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தியே இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை நேற்று முன்னெடுத்தனர்.

கடந்த 17ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் சண்டிலிப்பாய் – தொட்டிலடிச் சந்தியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

சம்பவத்தில் அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் (வயது – 37) என்பவர் தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கீழான மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனடிப்படையில் கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த இருவர், தெல்லிப்பழையைச் சேர்ந்த இருவர் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் என 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் திருடப்பட்டவை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 27
செய்திகள்இலங்கைபிராந்தியம்

305 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் எரிப்பு: பயணிகளுக்கு இலங்கை சுங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கைக்கு வரும் பயணிகள் எவரும் சிகரெட்டுகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்...

image d72f4bf3a7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

துப்பாக்கி உரிமம் வைத்திருப்போருக்குப் பாதுகாப்பு அமைச்சின் இறுதி எச்சரிக்கை: நாளைக்குள் புதுப்பிக்கத் தவறினால் அபராதம்!

துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், 2026 ஆம் ஆண்டிற்காகத் தமது உரிமங்களைப் புதுப்பித்துக்...

Estate
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 சம்பள ஒப்பந்தம் கையெழுத்தானது: பெப். 10 முதல் அமல்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக உயர்த்துவதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் இன்று (30)...

23 640d8e8cf27c8
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு: புலம்பெயர் வருமானம் மற்றும் சுற்றுலாத்துறையில் பெரும் வளர்ச்சி!

இலங்கையின் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி...