யாழ்., தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வரணி வடக்கு பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரம் காணப்பட்ட கம்பத்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
துன்னாலை, கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 27 வயதான அ.புவனேஸ்வரன் என்ற இளைஞரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews