இலங்கைக்கான கடன் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான பேச்சுகளை எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்திகளை சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அதன் பேச்சாளர் கேரி ரைஸ் நேற்று (19) இணையவழி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைய, இலங்கைக்கு ஒத்துழைக்க அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண பங்குதாரர்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
#SriLankaNews