அரசியல்
காலிமுகத்திடல் தாக்குதல்: மொரட்டுவை மேயர் உட்பட மேலும் 7 பேர் கைது!


கொழும்பு – காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மொரட்டுவை நகர மேயர் சமன் லால் பெர்னாண்டோ உள்ளிட்ட மேலும் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் குறித்த அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மொரட்டுவை நகர மேயருடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுல பிரசன்ன, கரந்தெனிய பிரதேச சபை உறுப்பினர் சமீர சதுரங்க, சீதாவக்க பிரதேச சபை உறுப்பினர் ஜயந்த ரோஹண, பந்துல ஜயமான்ன, தினெத் கீத்திக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.