ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படவுள்ளது.
இந்த விதிமுறைகள் மீறப்படுவதாக ஏதேனும் தகவல் கிடைத்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்துக்கோ அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
#SriLankaNews
Leave a comment