தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக காலை 9 மணியளவில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் சக உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வீதியால் பயணித்த பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

VideoCapture 20220517 105027

#SriLankaNews

Exit mobile version