ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை! – ஆளுங்கட்சி எதிர்ப்பு

Gotabaya Rajapaksa

ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை இன்று (17) விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பை வெளியிட்டது.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்காக, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் யோசனையை சுமந்திரன் எம்.பி. முன்வைத்தார். அதனை லக்‌ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார்.

இந்த யோசனைக்கு ஆளுங்கட்சி உடன்படவில்லை. நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு வேண்டும் என தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார். இதன்போது தற்போது வாக்கெடுப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி வெற்றிபெறும் பட்சத்தில், ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை விவாதத்துக்கு வராது.

#SriLankaNews

Exit mobile version