யாழ்ப்பாணம், வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சிலரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவப் பொம்மை சபை முன்பாகத் தீட்டியிட்டுக் கொளுத்தப்பட்டது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின்(மானிப்பாய்) அமர்வு இன்று தவிசாளர் அ.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த அமர்வில் கலந்துகொள்வதற்கு வந்த சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியின் உருவப் பொம்மையை இழுத்து வந்து சபை முன்றலில் தீயிட்டுக் கொளுத்தினர்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினக் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி சபை உறுப்பினர் ஒருவர் சிலுவை தாங்கி சபைக்கு வந்தார்.
அத்துடன் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்டவற்றால் நாடு அரை அம்மணமாக உள்ளதாகத் தெரிவித்து , தானும் அரைகுறையான ஆடை அணிந்து வந்து சபை அமர்வில் உறுப்பினர் ஒருவர் கலந்துகொண்டார்.
#SriLankaNews
Leave a comment