சுயாதீன எம்.பிக்கள் குழுவும் ’21’ திருத்த வரைபு சமர்ப்பிப்பு!

photo

அரசிலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் எம்.பிக்கள் குழு அரசமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான யோசனை வரைபை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று கையளித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச அணி, உதய கம்மன்பில அணி உள்ளிட்ட 11 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த யோசனை வரைபை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த வரைபில் பிரதானமாக அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை நீக்கவேண்டும் என்றும், 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே தனது யோசனை வரைபை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளது. சஜித் அணி 21ஆவது திருத்த யோசனை வரைபை முன்வைத்துள்ள நிலையிலேயே அந்தத் திருத்தம் தொடர்பில் சபாநாயகரிடம் இரண்டாவது யோசனை வரைபும் கையளிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version